இலங்கையில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தேடப்படும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்துடன் தொடர்புடைய 30 நபர்களை கைது செய்து அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அலஸ் தெரிவித்தார்.
மேலும், தேடப்படும் 30 சந்தேக நபர்களில் 29 பேர் துபாய், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் இருப்பதாக தெரிய வந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
தேடப்படும் பாதாள உலகக் குழு மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வது தொடர்பில் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விசேட நடவடிக்கைக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டாலும் எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகள் முற்றாக கட்டுப்படுத்தப்படும் என அமைச்சர் டிரான் அலஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
The post துபாயில் வசிக்கும் 29 இலங்கையர்கள் பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றனர் appeared first on Minnal 24 News.